வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தமிழகத்தில், 20 லட்சம் பேர், ஆதார் எண் உடன், 'பான்' எண்ணை இணைக்காதது தெரிய வந்துள்ளது.
வங்கிகளில், 49 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணப் பரிவர்த்தனை; வர்த்தக ரீதியிலான நிதிப் பரிவர்த்தனை போன்றவற்றிற்கு, 'பான்' எண் எனும் நிரந்தர கணக்கு எண் அட்டை அவசியம்.
இதுகுறித்து, வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது: ஆதார் எண் -- பான் இணைப்புக்கான அவகாசம் வரும், 31ம் தேதியுடன் நிறைவடைகிறது.

தமிழகத்தில், 60 லட்சத்துக்கும் அதிகமானோர் பான் அட்டை வைத்துள்ளனர். அதில், 40 லட்சம் பேர் வரை, ஆதாருடன் இணைத்துள்ளனர்; 20 லட்சம் பேர் இணைக்கவில்லை.
ஆதார் அட்டை, பான் அட்டையில் உள்ள பெயருக்கு இடையே, பலருக்கு வேறுபாடுகள் இருப்பதால், இரண்டையும் இணைப்பதில் சிக்கல்கள் உள்ளன. இதுவரை, ஆதார், பான் எண் இணைப்பிற்கான அவகாசம் நீட்டிப்பது தொடர்பாக, எந்த அறிவிப்பும் வரவில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.