வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: சென்னை வானிலை மையம் அறிவிப்பு: மாநிலத்தில் அதிகபட்சமாக மன்னார்குடியில், 6 செ.மீ., மழை, கோத்தகிரி, தேன்கனிக்கோட்டை, குன்னுார், 5; திருப்பூர், 4; பாலக்கோடு, 3; ஒகேனக்கல், கொடைக்கானல், 2; ஊட்டி, குடியாத்தம் பகுதிகளில், 1 செ.மீ., மழை பெய்துள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி, ஈரோட்டில், 39 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவானது. அதாவது, 102 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. கரூர் பரமத்தி, மதுரை, நாமக்கல், திருச்சி, திருப்பத்துார், வேலுாரில் 38 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவானது. அதாவது ஏழு இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகியுள்ளது.
தென் மாநிலங்களின் மேல் பகுதியில், வளி மண்டல கீழடுக்கில், கிழக்கு, மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. எனவே, தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 31 வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.