ஹிந்து தர்ம எழுச்சி மாநாடு: உயர்நீதிமன்றம் அனுமதி

Updated : மார் 28, 2023 | Added : மார் 28, 2023 | கருத்துகள் (9) | |
Advertisement
மதுரை: ஹிந்து மக்கள் கட்சி சார்பில் துாத்துக்குடியில் ஏப்.1ல் நடைபெற உள்ள சனாதன ஹிந்து தர்ம எழுச்சி மாநில மாநாட்டிற்கு அனுமதிக்க போலீசாருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.ஹிந்து மக்கள் கட்சி மாநில செயலர் வசந்தகுமார் தாக்கல் செய்த மனு:ஹிந்து மக்கள் கட்சி சார்பில் சனாதன ஹிந்து தர்ம எழுச்சி மாநில மாநாடு துாத்துக்குடி அபிராமி மகாலில் ஏப்.1ல் துவங்குகிறது.

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மதுரை: ஹிந்து மக்கள் கட்சி சார்பில் துாத்துக்குடியில் ஏப்.1ல் நடைபெற உள்ள சனாதன ஹிந்து தர்ம எழுச்சி மாநில மாநாட்டிற்கு அனுமதிக்க போலீசாருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

ஹிந்து மக்கள் கட்சி மாநில செயலர் வசந்தகுமார் தாக்கல் செய்த மனு:
ஹிந்து மக்கள் கட்சி சார்பில் சனாதன ஹிந்து தர்ம எழுச்சி மாநில மாநாடு துாத்துக்குடி அபிராமி மகாலில் ஏப்.1ல் துவங்குகிறது. வள்ளலாரின் அவதார விழா, மேல் மருவத்துார் ஆதிபராசக்தி பூஜை, பெண்கள் கருத்தரங்கு, சினிமா கலைஞர்களுக்கு விருது வழங்குதல் நடைபெறும். துறவிகள், ஆதினங்கள் ஆசி வழங்குகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்கின்றனர்.

ஏப்.,2 ல் டூவிபுரத்தில் ஊர்வலம் துவங்கி, சிதம்பர நகர் பஸ் ஸ்டாண்டில் நிறைவடையும். அருகே பொதுக்கூட்டம் நடைபெறும். இம்மாநாடு ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது. மாநாடு, ஊர்வலம், பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி தமிழக உள்துறை செயலருக்கு மனு அனுப்பினோம்.



latest tamil news



துாத்துக்குடி மத்திய பாகம் போலீசார், 'ஹிந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தியுள்ளார். இதனால் ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினர் அதிருப்தியில் உள்ளனர். ஹிந்து மக்கள் கட்சி ஊர்வலம், பொதுக்கூட்டத்தின்போது சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. அனுமதி மறுக்கப்படுகிறது,' என உத்தரவிட்டனர்.

சமூக நல்லிணக்கம், பழமையான தமிழ் கலாசாரத்தை பாதுகாக்கும் நோக்கில் மாநாடு நடத்தப்படுகிறது. நிராகரித்த உத்தரவிலுள்ள காரணங்கள் ஏற்புடையதல்ல. அதை ரத்து செய்து அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு வசந்தகுமார் குறிப்பிட்டார்.

நீதிபதி ஜி.இளங்கோவன் விசாரித்தார்.

தமிழக அரசு தரப்பு: அனுமதிக்கும் பட்சத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. அனுமதிக்க தேவையில்லை.மனுதாரர் தரப்பு: ஏப்.1ல் மகாலில் கூட்டம் நடத்திக் கொள்கிறோம். ஏப்.2ல் ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்த விரும்பவில்லை. இவ்வாறு விவாதம் நடந்தது.

நீதிபதி: ஏப்.,1 ல் மகாலில் உள்ளரங்க கூட்டம் நடத்திக் கொள்ளலாம். சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம் என மனுதாரர் தரப்பில் போலீசாரிடம் உத்தரவாதம் தாக்கல் செய்ய வேண்டும். அதனடிப்படையில் போலீசார் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

Nellai tamilan - Tirunelveli,இந்தியா
28-மார்-202314:35:33 IST Report Abuse
Nellai tamilan சனாதன எதிர்ப்பு மாநாடு நடத்த உடனடியாக அனுமதியளிக்கும் காவல்துறை சனாதன எழுச்சி மாநாடு என்றால் மட்டும் ஏன் சட்டஒழுங்கு என்று நாடகம் ஆடுகிறது. உங்களால் சட்டஒழுங்கை காக்க முடியாவிட்டால் ராஜினாமா செய்துவிட்டு ஒழியுங்கள். குடிகார சமூகம் என்று ஒழுங்கானவர்களுக்கு வாக்கு செலுத்துகிறதோ அன்று தான் தமிழகம் திருந்தும்
Rate this:
DVRR - Kolkata,இந்தியா
28-மார்-202316:40:29 IST Report Abuse
DVRRஅதுதான் தினம் தினம் திராவிட மாடல் என்று உளறும் திராவிட மடியல் அரசின் வாதம் "சனாதன எழுச்சி மாநாடு என்றால் திராவிட மடியில் அரசின் வீழ்ச்சி" என்ற பயம்...
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
28-மார்-202312:03:52 IST Report Abuse
sridhar இதே அளவுகோல் எல்லா கூட்டங்களுக்கும் பொருந்துமா. சட்டம் ஒழுங்கு பிரச்னை யாரால் ஏற்படுமோ அவர்கள் மேல் தான் நடவடிக்கை தேவை.
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
28-மார்-202311:22:00 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது முழுக்க முழுக்க கூட்டம்/மாநாடு நடத்துறவங்க கையில் மட்டும்தான் உள்ளதா? வெளிநபர் யாராவது கையெறி குண்டு வீசினால் கூட கூட்டம் நடத்துறவங்க பொறுப்பு தானா ????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X