திருவனந்தபுரம் : திருவனந்தபுரம் அருகே உள்ள சங்குமுகம் கடற்கரைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
அங்கு நின்றபடி பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இளம்பெண் கடற்கரையை ரசித்து கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் செல்பி எடுக்க வேண்டும் என்று அப்பெண்ணிடம் கூறியுள்ளார்.
அவரும் சம்மதம் தெரிவிக்க செல்பி எடுக்கும் போது பெண்ணின் தேவையில்லாத பகுதியில் தொட்டு சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அப்பெண் சத்தம் போட்டதால் அங்கிருந்தவர்கள் சிறுவனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பெண் புகாரில் சிறுவனை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.