சோழவந்தான் : 'டூ - வீலர்' மீது அரசு பஸ் மோதி தம்பதி பலியாகினர்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே செம்புக்குடிபட்டியைச் சேர்ந்தவர் வீராசாமி, 43; தனியார் மில் தொழிலாளி. அவரது மனைவி தீபலட்சுமி, 38; தனியார் மருத்துவமனை நர்ஸ். இவர்களுக்கு 8 வயதில் இரட்டை குழந்தைகளான மகன், மகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் தீபலட்சுமியின் சகோதரர் நிச்சயதார்த்தத்திற்கு, மதுரையில் ஆடைகள் வாங்கிக் கொண்டு, இரவு, 11:15 மணிக்கு டூ - வீலரில் தம்பதி வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். வீராசாமி 'ஹெல்மெட்' அணிந்திருந்தார்.
நகரி அருகே நான்குவழிச்சாலையில் வந்தபோது, மதுரையில் இருந்து பெரியகுளம் சென்ற அரசு பஸ், டூ - வீலரில் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். சோழவந்தான் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.