திருநெல்வேலி : புதுச்சேரியில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ஹைட்ரஜன் சிலிண்டர்கள் ஏற்றிச் சென்ற லாரி ரெட்டியார்பட்டி அருகே நான்கு வழிச்சாலை சென்டர் மீடியன் தடுப்பில் மோதி கவிழ்ந்தது.
நேற்று மதியம் 3:00 மணியளவில் இந்த விபத்து நடந்தது. லாரியில் இருந்த ஹைட்ரஜன் சிலிண்டர்கள் ரோட்டில் விழுந்து சிதறின. லாரி டிரைவர் ராஜன் லேசான காயமுற்றார்.
திருநெல்வேலி தீயணைப்பு மாவட்ட அலுவலர் கணேசன் உதவி அலுவலர் வெட்டும்பெருமாள் நிலைய அலுவலர் ராஜா தலைமையில் வீரர்கள் சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
ஹைட்ரஜன் வாய்வு கசிந்து பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக தண்ணீர் தெளித்து குளிர்வித்தனர்.
கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகளும் வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.