துப்பாக்கியால் சுட்டு நரிக்குறவர் வாலிபர் கொலை; கள்ளக்காதலால் விபரீதம்| Gunman kills youth with gun; Misfortune due to forgery | Dinamalar

துப்பாக்கியால் சுட்டு நரிக்குறவர் வாலிபர் கொலை; கள்ளக்காதலால் விபரீதம்

Added : மார் 28, 2023 | கருத்துகள் (4) | |
பெரம்பலுார் : பெரம்பலுார் அருகே, கள்ளக்காதலால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக வாலிபரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தவரை மங்களமேடு போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். பெரம்பலுார் மாவட்டம் மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அஜித், 30, திருமணமான நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த இவருக்கும் இவரது உறவுக்காரரின் மனைவி ஒருவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்ததாக
Gunman kills youth with gun; Misfortune due to forgery   துப்பாக்கியால் சுட்டு நரிக்குறவர் வாலிபர் கொலை;  கள்ளக்காதலால் விபரீதம்


பெரம்பலுார் : பெரம்பலுார் அருகே, கள்ளக்காதலால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக வாலிபரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தவரை மங்களமேடு போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


பெரம்பலுார் மாவட்டம் மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அஜித், 30, திருமணமான நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த இவருக்கும் இவரது உறவுக்காரரின் மனைவி ஒருவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த இவரது மாமனார் வாலிபர் அஜித்தை கண்டித்தும் அவர் கள்ளக்காதலை விட மறுத்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று இரவு 10:30 மணியளவில் அஜித்திடம் அவரது மாமனார் கள்ளக்காதலை விடுமாறு கூறினார். இதற்கு அஜித் மறுப்பு தெரிவித்தார்.


இதனால், ஆத்திரமடைந்த அஜித்தின் மாமனார் விலங்குகளை வேட்டையாட பயன்படும் நாட்டுத் துப்பாக்கியால் சரமாரியாக அஜித்தை சுட்டார். ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த அஜித் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து, மங்களமேடு போலீசார் வழக்கு பதிந்து அஜித்தின் மாமனாரை கைது செய்து விசாரிக்கின்றனர். நரிக்குறவர் வாலிபர் கள்ளக்காதல் கசுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X