பெரம்பலுார் அருகே கள்ளக்காதலால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, வாலிபரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றவர் கைது செய்யப்பட்டார்.
பெரம்பலுார் மாவட்டம் மங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித், 30. நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் தன் உறவினர் மனைவியுடன் தொடர்பு வைத்திருந்தார்.
மாமனார் கண்டித்தும் கள்ளக் காதலை கைவிட அஜித் மறுத்துள்ளார். நேற்று இரவு 10:30 மணிக்கு அஜித்திடம் அவரது மாமனார் மீண்டும் அறிவுரை கூறியுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அஜித்தின் மாமனார், விலங்குகளை வேட்டையாட பயன்படும் நாட்டுத் துப்பாக்கியால் அஜித்தை சுட்டார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அஜித் அதே இடத்தில் உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த மங்கலமேடு போலீசார், அஜித் மாமனாரை கைது செய்தனர்.