வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியான பி.எப்., வட்டி விகிதம் 8.10 சதவீதத்தில் இருந்து 8.15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த 2021 - 2022ம் ஆண்டில், 8.1 சதவீத வட்டி வழங்க முடிவு செய்யப்பட்டது. இது கடந்த நாற்பது ஆண்டுகளில் மிகக் குறைவாக கருதப்பட்டது. கடைசியாக 1977-78ம் ஆண்டில் வட்டி விகிதம் 8 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இதற்கு முன்பு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.5 சதவீதமாக இருந்தது.

இதைத்தான் கடந்த 2022ஆம் ஆண்டில் 8.1 சதவீதமாக குறைத்தனர். அப்போது இதற்கு கடுமையான எதிர்ப்பு வருங்கால வைப்பு நிதியாளர்களிடம் இருந்து எழுந்தது. இந்நிலையில், தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியான பி.எப்.வட்டி விகிதம் 8.10 சதவீதத்தில் இருந்து 8.15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
டில்லியில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறக்கட்டளை வாரிய குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பி.எப்., வட்டி விகிதம் 8.15 சதவீதமாக உயர்த்தப்பட்டதால் நாடு முழுவதும் உள்ள, சுமார் 7 கோடி தொழிலாளர்கள் பயன் பெறுவர்.