ஆம்பூர்: ஆம்பூர் அருகே, கிணற்றில் தவறி விழுந்த இரண்டு கரடிகளை வனத்துறையினர் மீட்டனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அருகே அரங்கல் துருகம் வனப்பகுதியையொட்டி, சக்கரவர்த்தி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அதன் நடுவில் 50 அடி ஆழ கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த வழியாக சென்றவர்கள் கிணற்றில் இரண்டு கரடிகள் விழுந்து கத்திக்கொண்டிருந்தை பார்த்தனர்.
ஆம்பூர் வனத்துறையினர், தீயணைப்பு துறையை சேர்ந்த 20 பேர் கரடிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கிணற்றின் மேல்பகுதியிலிருந்த புதர் அகற்றப்பட்டு, ஜே.சி.பி., மூலம் பள்ளம் தோண்டி சாய்தள பாதை அமைக்கப்பட்டது. பிறகு கரடிகள் மீட்கப்பட்டு அருகிலுள்ள வனப்பகுதியில் விடப்பட்டது.