''முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது,'' என, அணையில் ஆய்வுக்கு பின் மத்திய கண்காணிப்பு குழு தலைவர் விஜய்சரண் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
வல்லக்கடவிலிருந்து அணைப் பகுதிக்கு வரும் வனப்பாதையை ஆய்வு செய்தோம்.
அதை சீரமைப்பதற்கான நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி முடிவு செய்வோம்.
அணை பராமரிப்பு பணிகளுக்காக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அணையை ஒட்டியுள்ள பேபி அணை பலப்படுத்துவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்.
அணையில் இருந்து வெளியேறும் கசிவு நீர், நீர்மட்டத்திற்கு ஏற்ப சரியான அளவிலேயே உள்ளது. ஷட்டர்களின் இயக்கமும் சரியாகவே உள்ளது என்றார்.