வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: ராகுல் எம்.பி பதவி தகுதி நீக்கம் குறித்து, ‛இந்திய கோர்ட்டில் நடைபெறும் ராகுல் மீதான வழங்கை நாங்கள் கவனித்து வருகிறோம் என அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வெள்ளைமாளிகை துணை செய்தித்தொடர்பாளர் வேதாந்த் படேலிடம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை சுதந்திரத்திற்கு மரியாதை அளிப்பது எந்த ஜனநாயகத்திற்கும் அடிப்படை. இந்திய கோர்ட்டில் நடைபெறும் ராகுல் மீதான வழக்கை நாங்கள் கவனித்து வருகிறோம்.

கருத்துச் சுதந்திரம் உள்பட ஜனநாயக மதிப்புகளை பாதுகாப்பது குறித்த உறுதிப்பாட்டை இந்திய அரசுடன் நாங்கள் பரிர்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.