வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை முழு வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவது எங்களது இலக்கு என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

இது குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியதாவது: சிலர் 130 கோடி மக்களைச் சுமையாகக் கருதுகிறார்கள். ஆனால் 130 கோடி மக்களை மிகப்பெரிய சந்தையாக பார்க்கிறேன். பிரதமர் மோடி கடந்த 9 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்துள்ளார். பாஜ., அரசு மக்களுக்கு தேவையான திட்டங்களை உருவாக்குவதிலும், நாட்டின் வளர்ச்சி பாதையையும் நோக்கி சிறப்பாக செயல்படுகிறது.

2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை முழு வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவது எங்களது இலக்கு ஆகும். அதேபோல் 2025ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவது இரண்டாவது இலக்கு. கடந்த 9 ஆண்டுகளாக இந்த இரண்டு இலக்குகளையும் அடைய பிரதமர் மோடி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து இந்த திட்டங்கள் சிறப்பாக செயல்படுகிறதா என்பது குறித்து கண்காணிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.