திருவனந்தப்புரம்: சபரிமலையில் சாமி தரிசனம் முடித்துவிட்டு தமிழகம் திரும்பிக்கொண்டிருந்த பஸ் விபத்துக்குள்ளானது. இதில் 20 பேர் காயமடைந்தனர்.
சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குச் சென்றுவிட்டு தமிழகம் திரும்பும்போது, நிலக்கல் அருகே வந்தபோது பஸ் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
பஸ்சில் குழந்தைகள் உட்பட தமிழகத்தை சேர்ந்த 68 பேர் பயணித்தனர். விபத்தில் சிக்கி 20 பேர் காயமடைந்துள்ளனர் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.