வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி பந்தயம் உள்ளிட்ட போட்டிகளை அங்கீகரிக்கவில்லை என லோக்சபாவில் மத்திய விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து லோக்சபாவில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியிருப்பதாவது: ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி பந்தயம் உள்ளிட்ட போட்டிகளை அங்கீகரிக்கவில்லை.
மாட்டு வண்டி பந்தயம், ஜல்லிக்கட்டு போட்டியை ஊக்குவிக்கும் திட்டமும் இல்லை. 'கேலோ இந்தியா' உட்பட எந்த திட்டத்தின் கீழும் அங்கீகரிக்கவில்லை. கிராமப்புற வீரர்களை ஊக்குவிக்கும் கேலோ இந்தியா உள்ளிட்ட எந்தத் திட்டத்தின் கீழும் ஜல்லிக்கட்டு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.