ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி, 14 வது வார்டில் பட்டு நுால் சத்திரம்பகுதியில் குளம் உள்ளது. இந்த குளம் அப்பகுதியின் நிலத்தடி நீர்ஆதாரமாக இருந்து வருகிறது. இந்த குளத்தை துார்வாரி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள்எதிர்பார்த்தனர்.
இதையடுத்து மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் நீர்நிலைகளை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நகர்ப்புற மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் 1.33 கோடி ரூபாய் மதிப்பில்சீரமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு துவங்கியது.
குளம் துார் வாரி, கரைகள் முழுக்க கல் பதித்து பலப்படுத்தப் பட்டுள்ளன.
மேலும், குளக்கரையை சுற்றி நடைபாதை,மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, தடுப்பு கம்பிகள்அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.