கொல்லம்: கேரளாவில் திருவிழாவில் பெண்களை போல ஆண்கள் அலங்காரம் செய்து பிரார்த்தனை செய்தனர். அவர்களுக்கு ஆடை அலங்காரம் செய்தவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள கொட்டங்குளங்கரா ஸ்ரீதேவி கோவிலில் நடைபெறும் சமயவிளக்கு திருவிழா தனித்துவமான திருவிழாவாகவும், உலகில் வேறு எந்த கோவிலிலும் இல்லாத வினோத நடைமுறையுடன் கூடிய திருவிழாவாகவும் உள்ளது.

கோயிலின் முதன்மை தெய்வம் வனதுர்கா என்றும் அழைக்கப்படும் துர்கா தேவி என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு ஆண்கள் பெண்களைப் போல் பாரம்பரிய ஆடை மற்றும் வளையல் உள்ளிட்ட அலங்காரப் பொருட்களை அணிந்து பிரார்த்தனை செய்கிறார்கள். இதில் ஆண்களுக்கு பெண் ஆடை அலங்காரம் செய்தவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.