சென்னை, 'டான்பாஸ்கோ' அன்பு உள்ளம் இளைஞர் மன்றம் சார்பில், அருள் தந்தை ஜெரால்டு இரண்டாம் ஆண்டு நினைவு கைப்பந்து போட்டி, வில்லிவாக்கம், பலராமபுரம் விளையாட்டு திடலில் நடந்தது. இதில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.
இதில், அபாரமாக விளையாடிய டான்பாஸ்கோ அன்பு உள்ளத்தின் 'ஏ' மற்றும் 'பி' அணிகள், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
இதில், ஆரம்பம் முதல் அபாரமாக விளையாடிய 'ஏ' அணியினர், 3 - 1 என்ற செட் கணக்கில் 'பி' அணியினரை தோற்கடித்து, 'சாம்பியன்' கோப்பையை வென்றது.
மேலும், முதல் ஆறு இடங்களை பிடித்த அணிகளுக்கு, ரொக்கப் பரிசும் கோப்பைகளும் வழங்கப்பட்டன. தவிர, சிறந்த ஆட்டக்காரர்களுக்கும் கேடயங்கள் வழங்கப்பட்டன.
பரிசளிப்பு விழாவில், வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், அண்ணாநகர் மண்டல குழு தலைவர் கூ.பி.ஜெயின், சமூக சேவகர் கோபால கிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.