பொள்ளாச்சி:பொள்ளாச்சி 'சிம்ஸ்' கல்லுாரியில், ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பொள்ளாச்சி சக்தி தகவல் தொடர்பியல் மேலாண்மை (சிம்ஸ்) கல்லுாரி, ரோட்ராக்ட் சங்கம் சார்பில், பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், கர்ப்ப காலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், உட்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்து உணவு முறை குறித்தும் தெரிவிக்கப்பட்டது. மருத்துவர் பரிந்துரைப்படி, கர்ப்பிணிகள் உடற்பயிற்சி, யோகா பயிற்சி மேற்கொண்டு, உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், 60 பேருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், பழங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்கினர்.
கல்லுாரியின் ஆலோசகர் சுப்ரமணியன், துறை தலைவர் தியாகு, அரசு டாக்டர்கள் கார்த்திக்கேயன், சரவணபிரசாத், பேராசிரியர் ராஜலட்சுமி, நுாலகர் கவிதா ஆகியோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாட்டினை, ரோட்ராக்ட மாணவர்கள் செய்திருந்தனர்.