சென்னைலயோலா 'ஐகாம்' பொறியியல் கல்லுாரி சார்பில், 9ம் ஆண்டு விளையாட்டு போட்டிகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லுாரி வளாகத்தில், கடந்த 13ம் தேதி துவங்கின.
இதில், கிரிக்கெட் இறுதி ஆட்டம் நேற்று நடந்தது.
இதுவரை நடந்த அனைத்து 'நாக் - அவுட்' ஆட்டங்களின் முடிவில், எஸ்.ஆர்.எம்., மற்றும் ராஜலட்சுமி பொறியியல் கல்லுாரி அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
இறுதிப் போட்டியில் முதலில் களமிறங்கிய எஸ்.ஆர்.எம்., அணி, 20 ஓவர்கள் முழுமையாக விளையாடி, ஏழு விக்கெட் இழப்புக்கு, 167 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய ராஜலட்சுமி அணி, 19.1 ஓவர்களில், 'ஆல் அவுட்' ஆகி, 141 ரன்களில் ஆட்டமிழந்தது. இதையடுத்து, 22 ரன்கள் வித்தியாசத்தில், எஸ்.ஆர்.எம்., அணி வெற்றி பெற்று, கோப்பையை வென்றது.