பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, எஸ்.குமாரபாளையம் பள்ளியில், ஆண்டு விழா நடந்தது.
பொள்ளாச்சி, எஸ்.குமாரபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், ஆண்டு விழா நடந்தது. ஊராட்சி துணை தலைவர் கிருஷ்ணவேணி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில துணை தலைவர் சிவக்குமார், ஒன்றியக்குழு கவுன்சிலர் மோகன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் வகிதா பானு வரவேற்றார்.
விழாவில், மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. மாணவர்கள் முழு திறமையை வெளிப்படுத்தி நடனமாடியது, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பொதுமக்கள், இல்லம் தேடி கல்வி ஆசிரியர்கள், முன்னாள் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.