பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் அருகே கரும்பு லாரி மோதியதில் டூவீலரில் வந்த மூவர் பலியாயினர்.
பேரையூர் அருகேயுள்ளது தெய்வநாயகபுரம். இங்கு காளியம்மன் கோயில் பொங்கல் விழா நேற்று முதல் நடந்து வருகிறது. இதற்காக இதே ஊரைச் சேர்ந்த சேலத்தில் புத்தக கடை நடத்தி வந்த தங்கப்பாண்டி 56, சென்னையில் புத்தக கடை நடத்தி வந்த மாயாண்டி 60, சென்னை தனியார் நிறுவன ஊழியர் கண்ணன் 30, ஆகியோர் குடும்பத்துடன் வந்திருந்தனர். நேற்று பொங்கல் விழாவிற்கு பொருட்கள் வாங்க பேரையூருக்கு மூவரும் ஒரே டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) புறப்பட்டனர். சிலைமலைப்பட்டி ரோட்டில் வந்த போது எதிரே தேனி மாவட்டம் போடியிலிருந்து ராஜபாளையத்துக்கு கரும்பு ஏற்றி சென்ற லாரி மோதியதில் மூவரும் இறந்தனர்.
போடி டிரைவர் முத்துப்பாண்டியை போலீசார் கைது செய்தனர்.