சென்னை, திருவள்ளூர் மாவட்ட சதுரங்க சங்கம் சார்பில், 27வது திருவள்ளூர் மாவட்ட அளவிலான செஸ் போட்டி, ஆவடி அருகே, திருமுல்லைவாயல் மங்கலம் வித்யாஷ்ரமத்தில், நேற்று முன்தினம் நடந்தது.
இதில் ஏழு, 13, 14 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. ஏழு வயதுக்கு உட்பட்டோரில் ஜே.ரூபீஸ்வரன் ராம் மற்றும் எஸ்.ஹரித்ரா; 13 வயதுக்கு உட்பட்டோரில் டி.எஸ்.ஷரத் மற்றும் வி.சகனப்பிரயி ஆகியோர் முதலிடங்களை வென்றனர்.
இதேபோல், 17 வயது பிரிவில், முகப்பேர் டி.ஏ.வி., பள்ளி மாணவர் பி.யு.சித்தேஷ் மற்றும் பெண்களில் எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி மாணவி சக்தி நிவாஷினி ஆகியோர் வெற்றி பெற்று முதலிடங்களைப் பிடித்தனர்.
இந்த போட்டியில், முதல் இரண்டு இடங்களைப் பிடித்த வீரர் --- வீராங்கனையர், சிவகங்கை மற்றும் நெல்லை ஆகிய இடங்களில் நடக்கும், மாநில செஸ் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.