வால்பாறை:அரசு அதிகாரிகளை கண்காணிக்க, மாவட்ட கலெக்டர் தலைமையில் தனிக்குழு அமைக்க வேண்டும், என, மா.கம்யூ,, கோரிக்கை விடுத்துள்ளது.
வால்பாறை தாலுகா மா.கம்யூ., கட்சியின் பொதுச்செயலாளர் பரமசிவம், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: வால்பாறையில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகள் குறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்கும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுக்கும், அந்தந்த பகுதி அதிகாரிகள் செய்யும் தவறுகளை புகார் அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே, மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்டம் மற்றும் தாலுகா வாரியாக கண்காணிப்பு குழுக்களை அமைத்து, தவறு செய்யும் அரசு அதிகாரிகள் மீது, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக முதல்வர்,வால்பாறை மலைப்பகுதியில் வசிக்கும் மக்களின் அடிப்படை வசதிகள், வளர்ச்சி பணிகளில் நிலவும் மெத்தனப்போக்கு உள்ளிட்ட பிரச்சனைக்கு உடனடி தீர்வு காணும் வகையில், கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.