வீட்டின் கதவை உடைத்து பணம், நகை திருட்டு

Added : மார் 28, 2023 | |
Advertisement
மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த, அனுப்பம்பட்டு, காமாட்சியம்மன் நகரைச் சேர்ந்தவர் ஆனந்தி, 36. சென்னையில் துணிக்கடை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.கடந்த 24ம் தேதி இரவு, தன்னுடைய தாயாருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதால், வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்தினருடன் சென்னை மணலி சென்றார்.அடுத்த நாள் இரவு, அருகில் வசிப்பவர்கள் ஆனந்திக்கு போன் செய்து, வீட்டின் கதவு

மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த, அனுப்பம்பட்டு, காமாட்சியம்மன் நகரைச் சேர்ந்தவர் ஆனந்தி, 36. சென்னையில் துணிக்கடை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 24ம் தேதி இரவு, தன்னுடைய தாயாருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதால், வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்தினருடன் சென்னை மணலி சென்றார்.

அடுத்த நாள் இரவு, அருகில் வசிப்பவர்கள் ஆனந்திக்கு போன் செய்து, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு,திறந்த கிடப்பதாக தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக வீடு திரும்பிய ஆனந்தி, வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த, 3 சவரன் நகை, 200 கிராம் வெள்ளி, 10 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை திருடு போயிருப்பது தெரிந்தது.

இது குறித்து ஆனந்தி, மீஞ்சூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X