கண்ணகி நகர், இரண்டாவது கள்ளக்காதலுடன் தொடர்பில் இருந்த பெண்ணை, முதல் கள்ளக்காதலன் மது பாட்டிலால் தாக்கி கொலை செய்தார்.
காரப்பாக்கம், கந்தசாமி தெருவைச் சேர்ந்தவர் மல்லிகா, 40. கடந்த, 26ம் தேதி நள்ளிரவு, மது பாட்டிலால் தாக்கி கொலை செய்யப்பட்டார். கண்ணகி நகர் போலீசார் விசாரணையில், கள்ளக்காதலில் கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இது தொடர்பாக கண்ணகி நகரைச் சேர்ந்த ஜெயக்குமார், 45, என்பவரை, நேற்று கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது:
முதல் கணவர் இறந்ததால், முருகன் என்பவரை, மல்லிகா இரண்டாவது திருமணம் செய்தார். இந்நிலையில், கண்ணகி நகரைச் சேர்ந்த ஜெயக்குமார், 35, என்பவருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இவருக்கு தெரியாமல், பாண்டியன், 42, என்பவருடனும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட நாளில், மல்லிகாவும், பாண்டியனும் மது அருந்திவிட்டு, உல்லாசமாக இருந்துள்ளனர். இதை, ஜெயக்குமார் நேரில் பார்த்துள்ளார். இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில், ஜெயக்குமார், மது பாட்டிலால் தாக்கி மல்லிகாவை கொலை செய்துள்ளார்.இவ்வாறு போலீசார் கூறினர்.