திருவள்ளூர்:திருவள்ளூர், பெரியகுப்பத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி.
இவரது மகள் பிரிதிக் ஷா, 9. தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சிறுமி பிரிதிக் ஷா அருகில் உள்ள தன் பாட்டியின் வீட்டு அருகில் விளையாடிக் கொண்டு இருந்தார்.
இதை அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி கண்டித்து, வீட்டிற்கு சென்று படிக்குமாறு கூறி வீட்டின் சாவியை கொடுத்து அனுப்பினார்.
பின், அவர், தன் மனைவியுடன் 'பைக்'கில் அருகில் உள்ள 'பெட்ரோல் பங்க்'கிற்கு சென்றுவிட்டு வீட்டுக்கு, சிறிது நேரம் கழித்து வீடு திரும்பினார்.
அப்போது அவரது மகள் பிரிதிக் ஷா, வீட்டிற்குள் துாக்குப் போட்டு தொங்குவதை கண்டார்.
மகளை, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவி பிரிதிக் ஷா உயிரிழந்தார்.
இது குறித்து, நேற்று காலை, பெற்றோர் அளித்த புகாரின்படி, திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.