செங்குன்றம்,சென்னை, செங்குன்றம் அடுத்த பாடியநல்லுார், திருப்பூர் குமரன் தெருவைச் சேர்ந்தவர் கீர்த்தி, 20. இவர், மாதவரத்தில் உள்ள தனியார் கல்லுாரியில், 3ம் ஆண்டு 'கிரிமினாலஜி' படித்து வந்தார்.
இந்த நிலையில், அவரது தந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டதால், இரண்டு மாதத்திற்கு முன் தற்கொலை செய்து கொண்டார்.அதன் பின், தாயுடன் வசித்த கீர்த்தி, தந்தையின் இழப்பால் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம், வீட்டில் தனியாக இருந்த போது, மின் விசிறியில் புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.