புதுவண்ணாரப்பேட்டை, சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, கிராஸ் சாலையைச் சேர்ந்தவர் அஜீஸ் குப்தா, 40; திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், வீட்டு உபயோக பொருள் விற்பனை கடை நடத்தி வருகிறார்.
இவரது கடையில், புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த நாகராஜ், 35, என்பவர் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், அஜிஸ்குப்தா கடையின் கணக்குகளை சரிபார்த்த போது, ஊழியர் நாகராஜ் போலி 'பில்' தயாரித்து, வீட்டு உபயோக பொருட்களை மற்ற கடைகளுக்கு 'சப்ளை' செய்து, 18 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் திருடியது தெரிந்தது.
இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விசாரித்ததில், நாகராஜ் மோசடி செய்தது உறுதியானது. இதையடுத்து, போலீசார் நாகராஜை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.