அத்திமாஞ்சேரிபேட்டை:இரண்டு நாட்களாக மின் வினியோகம் பாதிப்பட்டிருப்பதால், அதிருப்தியில் உள்ள பொதுமக்கள் நேற்று இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அத்திமாஞ்சேரிபேட்டையில், இரண்டு நாட்களாக மின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
நேற்று கிராமத்தின் ஒரு சில பகுதிகளில் வினியோகம் சரி செய்யப்பட்ட நிலையில், சுந்தரேச நகர், அண்ணா தெரு உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் வினியோகம் செய்யப்படவில்லை.
அத்திமாங்சேரிபேட்டை துணை மின் நிலைய பணியாளர்கள் பெரும்பாலானோர் நேற்று விடுப்பு எடுத்திருந்ததாக கூறப்படுகிறது.
இதனால், மின் வினியோகம் செய்ய முடியவில்லை என தெரிய வந்தது. இதையடுத்து, சுந்தரேச நகர் மக்கள் நேற்று இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பொதட்டூர்பேட்டை போலீசார், சமரசம் செய்தனர்.