சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர், நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
நடைமேடை 4ல் சோதனையில் ஈடுபட்டபோது, அங்கு கேட்பாரற்று இரண்டு பைகள் இருந்தன. அதை, ரயில்வே பாதுகாப்பு படையினர் பிரித்து பார்க்கும் போது, அதில் ஏழு பண்டல்களாக மொத்தம் 14 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு 2.80 லட்சம் ரூபாய்.
இதற்கிடையே, மேற்கு வங்கம் மாநிலம் கோல்கட்டாவில் இருந்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு, நேற்று மாலை 5:25 மணி அளவில் 'ஹவுரா மெயில்' வந்தது.
அப்போது, ஆண் பயணியை சந்தேகத்தின்படி அழைத்து, அவரின் உடைமைகளில் சோதனை செய்யப்பட்டது. இதில், 1.5 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அஜினஸ், 24, என தெரியவந்தது.