பொதுச்செயலரான பின் பழனிசாமி வெளியிட்ட முதல் அறிவிப்பு:
அ.தி.மு.க.,வில் உறுப்பினர்களாக உள்ளவர்கள், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை புதுப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பப் படிவங்கள், ஏப்., 5 முதல் கட்சித் தலைமை அலுவலகத்தில் வினியோகிக்கப்படும்.
தமிழக விண்ணப்பப் படிவம், 10 ரூபாய்; பிற மாநிலம், 5 ரூபாய். உறுப்பினர் உரிமைச் சீட்டு ஒரு கார்டுக்கு, தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால், 10 ரூபாய்; பிற மாநிலங்களுக்கு, 5 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு படிவத்தில், 25 பேரை சேர்க்கலாம். கட்சியினர் தங்களுக்கு தேவையான விண்ணப்பப் படிவங்களை பெற்று, ஏற்கனவே உறுப்பினர்களாக இருப்போர் பதிவை புதுப்பிக்கும் பணியிலும், புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியிலும் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.