நீங்கள் வீர் சாவர்க்கராகவே முடியாது!

Updated : மார் 29, 2023 | Added : மார் 29, 2023 | கருத்துகள் (55) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்ஜி.ரங்கராஜன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ -- மெயில்' கடிதம்: 'நான் வீர் சாவர்க்கர் அல்ல; காந்தி. அதனால், மன்னிப்பு கேட்க மாட்டேன்' என்று தெரிவித்துள்ளார்,அவதுாறு வழக்கில் இரண்டாண்டு சிறை தண்டனை பெற்ற ராகுல்.ஆமாம் ராகுல் அவர்களே... நீங்கள் சொல்வது சரிதான்; நியாயம் தான்.
You can never be Veer Savarkar!   நீங்கள் வீர் சாவர்க்கராகவே முடியாது!



உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்


ஜி.ரங்கராஜன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ -- மெயில்' கடிதம்: 'நான் வீர் சாவர்க்கர் அல்ல; காந்தி. அதனால், மன்னிப்பு கேட்க மாட்டேன்' என்று தெரிவித்துள்ளார்,அவதுாறு வழக்கில் இரண்டாண்டு சிறை தண்டனை பெற்ற ராகுல்.

ஆமாம் ராகுல் அவர்களே... நீங்கள் சொல்வது சரிதான்; நியாயம் தான். சுதந்திரத்துக்காக கொடி பிடித்து, தன் வாழ்நாளில் பாதியை, அந்தமான் செல்லுலார் சிறையில் கழித்த, வீர் சாவர்க்கராக நீங்கள் எப்படி இருக்க முடியும்? அரசியலில் அவ்வப்போது தலையை காண்பித்து, 'இதோ நானும் இருக்கேன்'னு, 'சீன்' போடும் நீங்கள் எப்படி, அந்த தியாக வீரருக்கு சமமானவராக முடியும்?


latest tamil news


சுய புத்தி இல்லாமல் பேசுவதோடு, ஆண்டில் பாதி நாட்கள் வெளிநாட்டு பயணம்மேற்கொள்பவர் நீங்கள். உங்களுக்கு தெரிந்தது எல்லாம், அரண்மனை, 'ஏசி' வாழ்க்கை, இத்தாலியன் உணவு. அதற்கேற்ற வகையில், உங்களுக்கு செல்லம் கொடுத்து கெடுத்துள்ளானர், உங்களின் தாயார் சோனியா மற்றும் சகோதரி பிரியங்கா. அந்தமான் செல்லுலார் சிறையையே பார்த்திராத நீங்கள், அவரை பற்றி பேசுவது சரியா?

வீர் சாவர்க்கர் பெயரை சொல்லவே, ஒரு தகுதி வேண்டும்... அது ஊழலுக்கு பெயர் பெற்ற, ஊரை விற்று உலையில் போட்ட, காங்கிரஸ் கட்சிக்கோ, அந்தக் கட்சியைச் சேர்ந்த உங்களுக்கோ சுத்தமாக கிடையாது. நீங்கள் வேண்டுமானால், 'மாபியா' கும்பல், ஊழல் பேர் வழிகள் பற்றி பேசலாம்; அதற்கான தகுதி உங்களுக்கு இருக்கிறது.

'நான் காந்தி; மன்னிப்பு கேட்க மாட்டேன்' என்கிறீங்க... எந்தக் 'காந்தியை குறிப்பிடுகிறீர்கள்? உப்புச் சத்தியாகிரகம் செய்த தேசப்பிதா காந்தியா இல்லை... தனக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததால், நாட்டில் அவசரநிலையை பிரகடனம் செய்து, ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்த, உங்களின் பாட்டி இந்திராவை பற்றி சொல்கிறீர்களா?

அதுவும் இல்லையெனில், போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் சிக்கி, ஊரே கைகொட்டி சிரித்த, உங்களின் அப்பா ராஜிவை பற்றி சொல்கிறீர்களா? நீங்கள் தலைகீழாக நின்றாலும், ஒரு போதும் விடுதலைத் தியாகி வீர் சாவர்க்கராக முடியவே முடியாது.

அதேபோல, நீங்கள் வாழ்நாள் முழுதும் உருண்டு புரண்டாலும், அந்த உத்தமர், தேசப்பிதா மகாத்மா காந்தியாகவும் முடியவே முடியாது. நீங்கள் வேண்டுமானால், நாட்டை கொள்ளையடிக்க துணை போன குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று, காலரை துாக்கி விட்டு கொள்ளலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (55)

Ellamman - Chennai,இந்தியா
29-மார்-202321:39:25 IST Report Abuse
Ellamman உலகிலேயே ஆக சிறந்த ஆள்காட்டி ஆக மாற யார் தான் விரும்புவார்கள்?? இதுவரை உலக வரலாறில் இப்படிப்பட்ட ஒரு தலைமையை போற்றி அவர் வழி வந்ததாக சொல்லிக்கொண்டு அரசியல் செய்வதெல்லாம் இவர்களுக்கு மட்டுமே சாத்தியம். இதை மக்கள் நம்புவது வெட்கக்கேடானது
Rate this:
30-மார்-202301:11:30 IST Report Abuse
Senthil Kஇப்படி.. உருட்டு உருட்டினால்... மறுபடியும். கான்கிராஸ் கட்சிக்கு இந்திய மக்கள் ஓட்டு போட்டு மீண்டும் பிரதமர் பதவி தரப்போகிறதா?? இல்லவே.. இல்லை... நான் இறை தூதன்.. நான் ரெம்ப நல்லவன் என்று பொய் கதைகள் பல கூறி ஏமாற்றி வாழ இது பழங்காலம் இல்லை.. 21ம் நூற்றாண்டு... போய் உன் பொழப்ப பாரு... ரெம்ப உருட்டாதே......
Rate this:
Cancel
பைரவர் சம்பத் குமார் 1).ராஜீவ் காந்தி இப்படி ஒரு மகனை பெற்று எடுத்ததற்கு இப்பொழுது உயிரோடு இருந்தால் கண்டிபாக வருத்தப்படுவார்.2). ராகுலுக்கு வெயில் அதிக மானதால் பைத்தியம் பிடித்துவிட்டது போல் தெரிகிறது.3). சோனியா காங்கிரஸ் என்ற பாரம்பரிய கட்சியை அழிக்க வந்த சூனியக்காரி.4). சாவர்கரை தூற்றுவதாக நினைத்து கொள்ளி கட்டையால் தன் தலையை தானே ராகுல் சொறிந்துக் கொள்கிறார்.5). இரண்டு வருட தண்டனை என்றப் போது பாவம் என்று தோன்றியது.6). சாவர்க்கரை பேசுவதை பார்க்கும் போது இன்னும் ஐந்து ஆறு வருடங்கள் தண்டனையை சேர்த்தி கொடுத்தால் இருந்தால் பரவாயில்லை என்று தோன்றுகிறது.7). நீதிமன்றம் இவரது குடியுரிமையை விசாரித்து நாடு கடத்த வேண்டும்.
Rate this:
Cancel
29-மார்-202319:37:43 IST Report Abuse
முருகன் ராகுல் காந்தி அதிகாரத்தில் இருந்தால் இப்படி எழுதுவதற்கு தைரியம் இருக்குமா ?
Rate this:
Ellamman - Chennai,இந்தியா
29-மார்-202321:36:43 IST Report Abuse
Ellammanவிளம்பரத்துக்கு பின்னாடியே போவார்கள். தி மு க பின்னாடி கூட விளம்பரத்துக்கு போன வரலாறு பசுமையா இருக்கு...
Rate this:
29-மார்-202322:04:58 IST Report Abuse
kalyanasundaram very nice reply...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X