டூவீலரில் வந்தவர் பலி
திருமங்கலம்: டி. அரசபட்டி முன்னாள் அ.தி.மு.க., கிளை செயலாளர் கருப்பு மகன் சரத்குமார் 26. கட்டட தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகி 7 மாத குழந்தை உள்ளது. கப்பலுாரில் வசித்து வந்தார். இவரது சகோதரர் வீட்டு விசேஷத்திற்கு வந்த உறவினர் ஒருவரை நேற்று முன்தினம் இரவு டி.அரசபட்டியில் விட்டு விட்டு இரவு 8:00 மணிக்கு டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) திருமங்கலம் வந்தார். நான்கு வழிச்சாலையில் உசிலம்பட்டி ரோடு சந்திப்பு அருகே வரும்போது எதிர் திசையில் வந்த நெற்கதிர் அறுவடை செய்யும் இயந்திரம் டூவீலர் மீது மோதியது. இதில் சரத்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். டிரைவர் விவேக்கை கைது செய்து திருமங்கலம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சாவுடன் கைது
உசிலம்பட்டி: இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையில் போலீசார் நடத்திய சோதனையில் திருநெல்வேலி மாவட்டம் காமயம்பட்டி சுத்தமல்லி ஒச்சு என்ற குமார் 22, ஒடிசா மாநிலம் கஜபதி ஜெல்லிகார்டு சுதேஸ்லிமாவை 42, கைது செய்து 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
* முத்துபாண்டிபட்டியில் நடத்திய சோதனையில் 6 கிலோ கஞ்சாவுடன் தங்கப்பாண்டி மனைவி சிவசூர்யா 32, கருக்கட்டான்பட்டி குபேந்திரனை 45, கைது செய்தனர். தங்கப்பாண்டியை தேடிவருகின்றனர்.