உசிலம்பட்டி: உசிலம்பட்டி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட பொருளாளர் ரமேஷ்வரி, வட்டார தலைவர் செல்வி, செயலாளர் சுகுணா, பொருளாளர் நித்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அங்கன்வாடியில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒரு மாத கோடை விடுமுறை வழங்க வேண்டும். 25 ஆண்டுகள் பணிபுரிந்த பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும். சமையல் காஸ் சிலிண்டருக்கு பில்லில் உள்ளபடி பணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.