சென்னை:அ.தி.மு.க., தலைமை அலுவலகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலையை, வி.பி.ராமன் சாலை என, பெயர் மாற்றம் செய்ய, அரசுக்கு, சென்னை மாநகராட்சி பரிந்துரைத்துள்ளது.
அதன்படி, மெரினாவில் இருந்து ராயப்பேட்டை, இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் வரை உள்ள பகுதியை, 'வி.பி.ராமன் சாலை' என பெயர் மாற்றம் செய்ய, மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
அரசின் முன்னாள் தலைமை அரசு வழக்கறிஞராகவும், தி.மு.க.,வின் சட்ட திட்டத்தை உருவாக்கும் குழுவிலும் வி.பி.ராமன் இடம் பெற்றிருந்தார்.
விரைவில், அவ்வை சண்முகம் சாலை, வி.பி.ராமன் சாலையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.