அவதுாறு வழக்கில் உத்தவுக்கு சம்மன்| Summons for Utdah in defamation case | Dinamalar

அவதுாறு வழக்கில் உத்தவுக்கு 'சம்மன்'

Updated : மார் 29, 2023 | Added : மார் 29, 2023 | கருத்துகள் (4) | |
புதுடில்லி, அவதுாறு வழக்கில் ஆஜராகும்படி மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, அவரது மகன் ஆதித்ய தாக்கரே, அவரது ஆதரவாளர் சஞ்சய் ராவத் ஆகியோருக்கு புதுடில்லி நீதிமன்றம், 'சம்மன்' அனுப்பி உள்ளது. மஹாராஷ்டிராவில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்., தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடந்தது. சிவசேனா மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டே, உத்தவுக்கு எதிராக போர்க்கொடி
Summons for Utdah in defamation case   அவதுாறு வழக்கில் உத்தவுக்கு 'சம்மன்'

புதுடில்லி, அவதுாறு வழக்கில் ஆஜராகும்படி மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, அவரது மகன் ஆதித்ய தாக்கரே, அவரது ஆதரவாளர் சஞ்சய் ராவத் ஆகியோருக்கு புதுடில்லி நீதிமன்றம், 'சம்மன்' அனுப்பி உள்ளது.

மஹாராஷ்டிராவில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்., தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடந்தது. சிவசேனா மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டே, உத்தவுக்கு எதிராக போர்க்கொடி துாக்கினார்.


latest tamil news


சிவசேனாவைச் சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்களை தன் பக்கம் இழுத்த ஏக்நாத் ஷிண்டே, பா.ஜ.,வுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தார்.

சிவசேனாவைச் சேர்ந்த பெரும்பாலான எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் ஷிண்டே வசம் வந்ததால், சிவசேனா கட்சியும், அந்த கட்சியின் சின்னமும் அவருக்கே சொந்தம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதை கடுமையாக விமர்சித்த உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே, சஞ்சய் ராவத் ஆகியோர், 'ஏக் நாத் ஷிண்டே, 2,000 கோடி ரூபாய் கொடுத்து, தனக்கு சாதகமான தீர்ப்பை வாங்கியுள்ளார்' என்றனர்.

இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே தரப்பைச் சேர்ந்த ராகுல் ரமேஷ் என்பவர், புதுடில்லி நீதிமன்றத்தில் தொடர்ந்த அவதுாறு வழக்கில், 'தேர்தல் ஆணையம், ஏக்நாத் ஷிண்டேவுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் இவர்கள் மூவரும் பேசியுள்ளனர். அவர்களுக்கு தண்டனை விதிக்க வேண்டும்' என, கோரியிருந்தார்.

இது தொடர்பான விசாரணைக்கு அடுத்த மாதம் 17ல் ஆஜராகும்படி, உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே, சஞ்சய் ராவத் ஆகியோருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X