திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் நடந்த கால்பந்து லீக் போட்டியில் பழநி ஸ்டாலின் எப்.சி. அணி வெற்றி பெற்றது. திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கில் நடந்த முதல் டிவிஷன் போட்டியில் பழநி ஸ்டாலின் எப்.சி. அணி, பார்வதி அணியை 5:1 என்ற கோல்கணக்கில் வென்றது. பழநி ஸ்டாலின் எப்.சி.அணியின் கணேசன் 3, அகில், பாலா தலா ஒரு கோல் அடித்தனர். பார்வதி அணியின் ஜான்சன் ஒரு கோல் அடித்தார்.
பிரிமியர் டிவிஷன் போட்டியில் ராக்போர்ட் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, அனுமந்தராயன்கோட்டை லயோலா எப்.சி., அணி 1:1 என்ற கோல்கணக்கில் சமநிலையில் இருந்தன. இரு அணியை சேர்ந்த மெல்வின், போஸ் தலா ஒரு கோல் அடித்தனர்.
பிரிமியர் டிவிஷன் போட்டியில் காமராஜபுரம் அணி, நிலக்கோட்டை சோழார் எப்.சி., அணியை 2:1 என்ற கோல்கணக்கில் வென்றது. காமராஜபுரம் அணியின் வெங்கடேஷன், சச்சின் தலா ஒரு கோல் அடித்தனர். நிலக்கோட்டை சோழார் எப்.சி. அணியின் பிரவின் ஒரு கோல் அடித்தார்.
புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்த முதல் டிவிஷனில் அரசு மேல்நிலைப்பள்ளி ஓல்ட் பாய்ஸ் அணி, திண்டுக்கல் கொரோநேஷன் அணியை 7:1 என்ற கோல்கணக்கில் வென்றது.
அரசு மேல்நிலைப்பள்ளி ஓல்ட் பாய்ஸ் அணியின் விக்கி 3, பாலசுந்தர், மோகன், கோபி, மருது தலா ஒரு கோல் அடித்தனர். திண்டுக்கல் கொரோநேஷன் அணியின் மருது ஒரு கோல் அடித்தார்.
2வது டிவிஷன் போட்டியில் லயன் ஸ்டீரீட் அணி, செயின் ஜோசப் மில்ஸ் அணியை 2:0 என்ற கோல்கணக்கில் வென்றது.
சூர்யபிரகாஷ், அஜீத் தலா ஒரு கோல் அடித்தனர். 3வது டிவிஷன் போட்டியில் எஸ்.எஸ்.எம். அணி, திண்டுக்கல் பட்டுமணி அணி 1:1 என்ற கோல்கணக்கில் சமநிலையில் இருந்தன. இரு அணியை சேர்ந்த கோகுல், கணேசன் தலா ஒரு கோல் அடித்தனர். 4ம் டிவிஷன் போட்டியில் அரசன் அணி, ஞானம் மெமோரியல் அணியை 2:1 என்ற கோல்கணக்கில் வென்றது. அரசன் அணியின் கோபிநாத் 2 கோல் அடித்தார். ஞானம் மெமோரியல் அணியின் மணிசூர்யா ஒரு கோல் அடித்தார்.