கொடைக்கானல்: கொடைக்கானலில் தந்தை இறந்து உடல் அடக்கம் செய்யப்படாத நிலையில் பிளஸ் 2 மாணவர் தேர்வு எழுதியது நெஞ்சை நெகிழ செய்தது.
கொடைக்கானல் ஆர்.சி., பள்ளியில் பிளஸ் 2 படித்து வருபவர் ரிபாஸ் ஆண்டனி.
இவருக்கு பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில் இவரது தந்தை எட்வர்ட் கென்னடி பாபு உடல் நல குறைவால் மார்ச் 27ல் இறந்தார்.
உடல் அடக்கம் செய்யப்படாத நிலையில் நேற்று முன்தினம் வணிகவியல் தேர்வு எழுதினார். தேர்வுக்கு பின் தந்தையின் உடல் அடக்கத்திற்கு சென்றார்.
ரிபாஸ் ஆண்டனி கடும் சோகத்தில் பொது தேர்வு எழுதிவிட்டு தந்தையுடன் உடலை அடக்கம் செய்தது பார்ப்போர் மனதை நெகிழ செய்தது.