திண்டுக்கல்: அரசு ஊழியர்கள் சங்க அடையாள வேலை நிறுத்த போராட்டத்தால் திண்டுக்கல்லில் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின.
பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி,நிலுவை தொகை,சரண்டர் வழங்க வேண்டும், பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவு வழங்கும் பணியை சத்துணவு ஊழியர்கள் மூலம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஒன்றிய அலுவலகம் முன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் முபாரக் அலி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் விவேகானந்தன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஜான்பாஸ்டின்,மாநில பொதுச்செயலாளர் பிச்சை வேல், கூட்டுறவு துறை ஊழியர் சங்க மாநில செயலாளர் கல்பனா, வேளாண்மை துறை அமைச்சு பணியாளர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ராசாத்தி, தமிழ்நாடு சத்துணவு சங்க மாநிலத் துணைத் தலைவர் ஞானத்தம்பி பங்கேற்றனர்.
மாவட்ட பொருளாளர் குப்புசாமி நன்றி கூறினார். அரசு ஊழியர்கள் போராட்டத்தில் மாவட்டத்தில் பல அரசு அலுவலகங்கள் ஊழியர்கள் இல்லாமல் வெறிச்சோடியது. பணிகளிலும் தொய்வு ஏற்பட்டது.