திண்டுக்கல் : ஆண்ட்ராய்டு அலைபேசிகள் நகர், கிராமங்களில் சர்வசாதாரணமாக புழக்கத்தில் உள்ளது. ஒரு சிலர் சாதுரியமாக ஆண்ட்ராய்டு அலைபேசிகளை இயக்கினாலும் பலர் கவர்ச்சி அறிவிப்புகளுக்கு மயங்கி பணத்தை இழந்து வருகின்றனர்.
சமீப நாட்களாக அலைபேசிகளுக்கு நிதி, கிரெடிட் கார்டு நிறுவனங்கள் ,தனியார் வங்கிகளிடம் இருந்து கிரெடிட் கார்டு வாங்குவதற்கும் , லோன் வாங்கவும் அழைப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.
சிலர் சுதாரித்து கொண்டு அழைப்புகளை கட் செய்து விடுகின்றனர். பலர், அவர்கள் கூறிய எண்களை அழுத்தி அந்நிறுவனங்களுக்கு கடன் காரர்களாகி விடுகின்றனர்.
அடுத்த சில நாட்களில் தங்கள் வங்கி கணக்கில் தாங்கள் கேட்ட கடன் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்த பின்னர் தான், கடன் பெற்ற விவரம் தெரிய வருகிறது.
கிராமங்களில் இதுபோன்று பலர் அலைபேசிகளுக்கு வரும் அழைப்புகளுக்கு தவறாக பதிலுாட்டம் செய்து நிதி நிறுவனங்களிடம் சிக்கி தவிக்கின்றனர்.
கடன் நிறுவனங்களுக்கு வங்கி கணக்கு எவ்வாறு செல்கிறது. அவர்களின் இருப்புத் தொகை எவ்வாறு தெரிகிறது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து மோசடி நபர்களிடமிருந்து மக்களை காக்க வேண்டும்.