அவிநாசி:அவிநாசி அருகேயுள்ள மொண்டிபாளையம் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் உண்டியல் எண்ணப்பட்டது.
இக்கோவிலில், நேற்று ஹிந்து அறநிலையத்துறையின் உதவி ஆணையர் செந்தில்குமார் மேற்பார்வையில், கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில், 7 லட்சத்து, 58 ஆயிரத்து 888 ரூபாய், பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டு இருந்தது.
இதுதவிர, தங்கம் 47 கிராம், வெள்ளி 3.5 கிராம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. கோவில் ஆய்வாளர் செல்வபிரியா, செயல் அலுவலர் சந்திர சுந்தரேஸ்வரன், அறங்காவலர் குழு தலைவர் ராமகிருஷ்ணன், அறங்காவலர் தியாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கருவலுாரில்...
கருவலுார் மாரியம்மன் கோவிலிலும் நேற்று உண்டியல் திறக்கப்பட்டு, எண்ணப்பட்டது. இதில், 6 லட்சத்து 18 ஆயிரத்து 839 ரூபாய், பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. இது தவிர, தங்கம் 44 கிராம், வெள்ளி 202 கிராம் காணிக்கையாக பக்தர்களால் செலுத்தப்பட்டிருந்தது. மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் லோகநாதன், அறங்காவலர் அர்ஜுனன், செயல் அலுவலர் குழந்தைவேல் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.