தியாகதுருகம்:கள்ளக்குறிச்சி, புத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நாராயணன் மகன் மணி, 59, தியாகதுருகம் போலீஸ் ஸ்டேஷனில் சப் - இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.
மூன்று மாதங்களில் ஓய்வு பெற இருந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு 7:00 மணிக்கு புகார் மனு ஒன்றை விசாரிக்க, வி.புதுார் கிராமத்திற்கு பைக்கில் புறப்பட்டார்.
விருகாவூர் செல்லும் சாலையில், அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியது. தலையில் படுகாயமடைந்த மணி, சேலம் தனியார் மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில் இறந்தார்.