திண்டுக்கல்: கோவை குனியமுத்துார் பகுதியை சேர்ந்த தொழிலாளி சபரிநாதனை 30,கத்தியால் குத்தி விட்டு தப்பிய இருவரை,திண்டுக்கல் போலீசார் கைது செய்தனர்.
கோவை குனியமுத்துார் பகுதியை சேர்ந்த தொழிலாளி சபரிநாதன்30. இவரை நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர்26,ஆரோக்கியராஜ்25, இருவரும் கத்தியால் குத்திவிட்டு லோடு ஆட்டோவில் தப்பினர்.
திண்டுக்கல்லில் இருப்பதாக கோவை குனியமுத்துார் போலீசார் திண்டுக்கல் எஸ்.பி., பாஸ்கரனுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி எஸ்.பி., உத்தரவில் தனிப்படை போலீசார் ஒட்டன்சத்திரம் பகுதியிலிருந்து தப்பி செல்ல முயன்ற குற்றவாளிகள் இருவரையும் மடக்கினர். அவர்களிடமிருந்து கத்தி, லோடு ஆட்டோவை பறிமுதல் செய்து குனியமுத்துார் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.