திருப்பூர்;திருப்பூர் மாவட்ட கோர்ட் வக்கீல் சங்க தலைவராக சுந்தரேஸ்வரன் தேர்வு செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்ட கோர்ட் வக்கீல்கள் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. நேற்று காலை துவங்கிய ஓட்டுப்பதிவு நேற்று மாலை வரை நடைபெற்றது. இதில் சங்க உறுப்பினர்கள் தங்கள் ஓட்டினைப் பதிவு செய்தனர்.தேர்தல் அலுவலர்களாக நாகராஜன், குமார் மற்றும் அண்ணாதுரை ஆகியோர் செயல்பட்டனர்.
இதில் சங்க தலைவராக சுந்தரேஸ்வரன், செயலாளராக கலாநிதி, பொருளாளர் சபரிகீதன், துணை தலைவராக சுதாகர், இணை செயலாளராக முத்துலட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாக குழு உறுப்பினர்களாக, ஆல்வின் அமல பிரசன்னா, சக்திவேல், முகமது சலீம், விஜயராஜ், பிரபாகரன் மற்றும் எம்.சக்திவேல் ஆகியோர் தேர்வு பெற்றனர்.இத்தேர்தல் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் நடந்திருக்க வேண்டும். உறுப்பினர் சேர்க்கை குறித்து, வக்கீல் ஒருவர் தமிழ்நாடு 'பார்' கவுன்சிலுக்கு புகார் அனுப்பியதால், தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு நேற்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.