பல்லடம்:பல்லடத்தில், கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. நகர பகுதியில் விரிவாக்க பணி நிறைவடையவுள்ள சூழலில், நகர பகுதியில் இருந்த பழமையான மரங்கள் திடீரென மாயமாகி உள்ளன.
இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், 'பல்லடம் அரசு மருத்துவமனை, கொசவம்பாளையம் ரோடு, பனப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த பழமையான மரங்கள் தீடிரென மாயமாகி உள்ளன. ரோடு விரிவாக்க பணிக்காக மரங்கள் வெட்டப்பட்டதா அல்லது யாரெனும் அனுமதி பெறாமல் வெட்டி உள்ளனரா, என்று தெரியவில்லை.
யாருக்கும் இடையூறு இல்லாமல் இருந்த நிழல் தரும் மரங்களை வெட்டியது வேதனை அளிக்கிறது. மரங்கள் வெட்டியது குறித்து விசாரணை மேற்கொள்வதுடன், வெட்டப்பட்ட மரங்களுக்கு இணையாக கோர்ட் அறிவுறுத்தலின்படி மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும்,' என்றனர்.