நத்தம்: -நத்தம் என்.பி.ஆர்., பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி மேலாண்மை துறை சார்பாக கல்லுாரிகளுக்கு இடையே 'பைன்ஸ்ட்ற 2கே23' போட்டிகள் நடைபெற்றது.
முதலாம் ஆண்டு மேலாண்மை துறை மாணவி நீரஜா வரவேற்றார். விஜய் டிவி கலக்கப்போவது யாரு டைட்டில் வின்னர் டி.எஸ்.கே., பரிசு வழங்கினார். பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் சுந்தர்ராஜன், மேலாண்மை துறை தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டனர்.
மாநில அளவில் 24 கல்லுாரிகளை சேர்ந்த 458 மாணவர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு நிறுவனங்களின் பொருட்காட்சி ,சாளரக் காட்சிகள் அமைக்கப்பட்டது. மாணவர் அஜித்குமார் நன்றி கூறினார்.