பல்லடம்:பல்லடத்தில், டூவீலர் திருட்டு வழக்கில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பல்லடம் அண்ணா நகரை சேர்ந்த திருநாவுகாகரசு மகன் திவாகரன், 42, மற்றும் அருணாசலம் மகன் சந்திரன், 52 ஆகியோரின்பைக், கடந்த, 20ம் தேதி காணாமல் போனது. இது குறித்து இருவரும் பல்லடம் போலீசில் புகார் அளித்தனர். விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், இருவரை கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை சேர்ந்த முருகன் மகன் பாலமுரளி 19 மற்றும் ராமையன் மகன் ஹரிஹரசுதன் 20 ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு பல்லடம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். இரு பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டன.