சென்னை:தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நேற்று 105 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஒமைக்கரானின் உருமாற்றமடைந்த எக்ஸ்.எக்ஸ்.பி. மற்றும் பி.ஏ.2 வகை பாதிப்புகள் அதிகளவில் பரவி வருகின்றன.
அதன்படி சென்னையில் 31 பேர்; கோவை 18; செங்கல்பட்டு 11; சேலத்தில் ஒன்பது பேர் என மாநிலம்முழுதும் 105 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுஉள்ளது. இதில் நேற்று 79 பேர் குணமடைந்த நிலையில் 660 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.