புதுடில்லி, வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள தொழிலதிபர் மெஹுல் சோக்சி, தரமற்ற வைர மற்றும் ரத்தின கற்களை, அதிக மதிப்பு உள்ளவையாக போலியாக மதிப்பிடச் செய்து வங்கியை ஏமாற்றி கடன் பெற்றதாக, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி மெஹுல் சோக்சி, 63, தன் உறவினர் நிரவ் மோடியுடன் சேர்ந்து, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பினார்.
கரீபிய தீவு நாடான ஆன்டிகுவா மற்றும் பார்புடாவில் அவர் தஞ்சம் அடைந்துள்ளார்.அவரை, தேடப்படும் குற்றவாளி என அறிவித்து, 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச போலீசார், 'ரெட் கார்னர் நோட்டீஸ்' பிறப்பித்து இருந்தனர்.
![]()
|
@ண்தஞtடிtடூஞு@ ரத்தின கற்கள்@@ண்தஞtடிtடூஞு@@
இந்தியாவைச் சேர்ந்த விசாரணை அதிகாரிகள் 2021 மே மாதம், ஆன்டிகுவா மற்றும் பார்புடாவில் இருந்து தன்னை கடத்திச் சென்றதாக மெஹுல் சோக்சி முறையிட்டார்.
இதைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டு இருந்த ரெட் கார்னர் நோட்டீசை சர்வதேச போலீசார் ரத்து செய்தனர்.இந்த நடவடிக்கையை மத்திய அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது.
இந்நிலையில், மத்திய அரசு நிறுவனமான, ஐ.எப்.சி.ஐ., எனப்படும் இந்திய தொழில் நிதி கழகத்தில், வைர, ரத்தின கற்கள் பதித்த நகைகளை அடகு வைத்த மெஹுல் சோக்சி, 2016ல் 25 கோடி ரூபாய் கடன் பெற்றார்.இந்த கடனையும் அவர் திருப்பிச் செலுத்தவில்லை.
@ண்தஞtடிtடூஞு@ தொடர் குற்றம்@@ண்தஞtடிtடூஞு@@
இது தொடர்பாக சி.பி.ஐ., கடந்த ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணையை முடித்து, கடந்த மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.அதில், மிகவும் தரமற்ற, மதிப்பு குறைவான வைர, ரத்தின கற்கள் பதித்த நகைகளை விலை உயர்ந்ததாக போலியாக மதிப்பிடச் செய்து, மெஹுல் சோக்சி கடன் பெற்று ஏமாற்றி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, மெஹுல் சோக்சி தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர் என்பதை சர்வதேச போலீசுக்கு நிரூபித்து, அவர் மீதான ரெட் கார்னர் நோட்டீசை மீண்டும் பிறப்பிக்கச் செய்யும் முயற்சியில் சி.பி.ஐ., ஈடுபட்டுள்ளது.